Feed on
Posts
Comments

Thirunarankondai is one of the ancient centers of Jainism. A Jain assembly called the ‘Veera Sangam’ flourished here under the leadership of Gunadhara Muni.  Over the hillock, is  a cave temple of great antiquity with bas-relief sculptures of Lord Parshwanatha (Appandainathar). The temple which is well known through the periods of Chola King Raja Raja I and Kulothunga I11 has a rich collection of bronze images. Chkaravarthi Nainar of Kadripakkam become the hereditary trustee of this temple from 1913 C.E This temple is currently managed by the Mel-Sitthamur math.

The book title “Jainism and Tamil” by Sri. Mayilai Seeni Venkadasamy (சமணமும் தமிழும் – மயிலை, சீனி. வேங்கடசாமி) in the chapter about the Ancient Jain temples of Tamilnadu, carries the following information about this temple:

Source: http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=4

பாவண்டூர்:

திருக்கோயிலூருக்குத் தென்கிழக்கில் 9 மைலில் பண்ருட்டி சாலையில் உள்ளது. இவ்வூரில், பண்டைக்காலத்தில் சமணரும் சமணக் கோயிலும் இருந்திருக்கவேண்டும். இவ்வூரில் இருந்த ரிஷபதேவரின் திருவுருவம் திருநறுங்கொண்டை சமணக் கோயிலில் இருக்கிறது.

திருநறுங்கொண்டை: (திருநறுங்குன்றம் – திருநறுங்குணம்.) திருக்கோயிலூர் தாலுகா. திருக்கோயிலூருக்கு, 12 மைலில் உள்ளது. இவ்வூருக்கு வடக்கே சுமார் 60 அடி உயரம் உள்ள பாறைக்குன்றில் கோயில் இருக்கிறது. மலைக்குச் செல்லப் படிகள் உண்டு. இக்கோயிலில் பார்சுவநாதர் திருவுருவம் இருக்கிறது. பார்சுவநாதர் கோயிலை அப்பாண்டைநாதர் கோயில் என்றும் கூறுவர். நின்ற திருமேனி. இங்குச் சந்திரநாதர் கோயிலும் உள்ளது. இங்குப் பல சாசனங்கள் காணப்படுகின்றன.89 குலோத்துங்கச் சோழரது 9 ஆவது ஆண்டில், வீரசேகர் காடவராயர் என்பவர் இங்கிருந்த நாற்பத்தெண்ணாயிரம் பெரும்பள்ளிக்கு வரிப்பணம் தானம் செய்திருக்கிறார். இராசராச தேவரது 13 ஆவது ஆண்டில் இங்கிருந்த மேலைப்பள்ளிக்குப் பணம் தானம் செய்யப்பட்ட செய்தியை இன்னொரு சாசனம் கூறுகிறது. இந்தத் தானத்தை ஆதிபட்டாரகர் புஷ்பசேனர் என்பவரிடம் ஒப்புவிக்கப்பட்டது. அப்பாண்டார்க்கு வைகாசித்திருநாள் சிறப்பு நடைபெற்றதையும், தைமாதத்தில் ஒரு திருவிழா நடைபெறும்படி நிலம் தானம் செய்யப்பட்டதையும், திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலத்துச் சாசனம் ஒன்று கூறுகின்றது. ‘திருநறுங்கொண்டை பெரியபாழி ஆழ்வார்க்கு நிலம் தானம் செய்யப்பட்ட செய்தி இன்னொரு சாசனம் கூறுகின்றது. இங்கிருந்த கீழைப்பள்ளிக்கு ஸ்ரீதரன் என்பவர் பொன் தானம் செய்ததை இன்னொரு சாசனம் கூறுகின்றது. இக்கோயில் ஸ்தலபுராணம் இவ்வூர்ச் சமணரிடம் உண்டு.90

Festivals

  • 7 days brahmotsav
  • Narkatchi festival  one day festival on 31 st jan every year.

Pictures

http://www.flickr.com/photos/55956427@N08/5201381485/in/set-72157625453860400/

News Articles

திருநறுங்குன்றம் கோவில் வளாக சமணப்படுக்கைகள் பாதுகாக்கப்படுமா?

Contact Details

Temple Priests

  • Mr. Bharatha chkravarthy
  • Phone: +91 04149 292112
    • Mr. Appandairaj
    • Cell Phone: +91 99432 40806

Trustees

  • Mr. Jayachndran
  • Cell Phone:  +91 94865 82058
    • Mr. Chakravarthy
    • Cell Phone: +91 97908 89092

Address

Thirunarunkondram,

Nannaram post, Ulundurpet Taluk,

Villupuram, Tamilnadu, India 606102.

(200 Km from Chennai on Chennai-Trichy road)

Map
Thirunarunkondai / Thirunarungudram Google Maps

Thirunarunkondai / Thirunarungudram Bing Maps

References

  • District Gazetteers, South Arcot  by Dr.B.S.Baliga, B.A.(Hona) Ph.D (London) –Page 48of 1962.
  • திருநருங்கொண்டைத் திருத்தல வரலாறு (புலவர் மணி. மு. சண்முகம்பிள்ளை)
  • அனந்த விஜயர் அருளிய அப்பாண்டைநாதர் உலா ஜைன இளைஞர் மன்றம் – சென்னை 17 வெளியீடு
  • சமணமும் தமிழும் – மயிலை, சீனி. வேங்கடசாமி

Leave a Reply